Kollywood News

  • Home/
  • Cine News/
  • ”ட்ரிபிள் ஏ” படத்தில் சிம்புவிற்கு தாயாக ஸ்ரேயா..???

”ட்ரிபிள் ஏ” படத்தில் சிம்புவிற்கு தாயாக ஸ்ரேயா..???



இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் தற்போது “அன்பானவன் அசராதவன் அடங்காதவன்” படத்தின் வேலைகளில் மிகவும் பிஸியாக இருந்து வருகிறார் சிம்பு. படத்தின் பாடல்கள் தற்போது உருவாகி வருகிறது. படத்தில் மொத்தமாக 9 பாடல்கள் இடம் பெறுகின்றன. படத்திற்கு இசையமைக்கிறார் யுவன் சங்கர் ராஜா.

இந்த படத்தில் சிம்பு மூன்று கெட்டப்புகளில் தோன்றவிருக்கிறார் என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான். இதில் ஒரு கெட்டப்பில் சிம்புவின் தாயாக நடிக்க நடிகை த்ரிஷாவிடம் கேட்ட போது அவர் மறுத்துவிட்டார்.

இதனையடுத்து ஸ்ரேயாவிடம் இந்த கதையை கூறிய போது ஓகே என கூறிவிட்டாராம். தந்தையாக வரும் சிம்புவிற்கு ஜோடியாக ஸ்ரேயா நடிக்கிறார். இவர்களுக்கு மகனாக தான் மற்றொரு சிம்பு தோன்றவிருக்கிறார்.

இன்னும் சில நாட்களில் படப்பிடிப்பு நடத்த படக்குழுவினர் முடிவெடுத்துள்ளனர். 

share