Kollywood News

  • Home/
  • Cine News/
  • ”AAA” படத்தில் சிம்புவின் அடுத்த கெட்டப்பிற்கு ஜோடி இவரா..???

”AAA” படத்தில் சிம்புவின் அடுத்த கெட்டப்பிற்கு ஜோடி இவரா..???



சிம்பு தற்போது இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்தில் மிகவும் பிஸியாக நடித்து வருகிறார். முதல்கட்ட படப்பிடிப்பு சில தினங்களுக்கு முன் திண்டுக்கல்லில் நடைபெற்று முடிந்தது.

இந்த படத்தில் சிம்பு மூன்று கெட்டப்பில் நடிக்கவிருக்கிறார் என்பது அனைவரும் அறிந்ததே. ஒரு கெட்டப்பில் ஸ்ரேயா ஜோடியாக நடிக்கிறார். மற்றொரு கெட்டப்பிற்காக பல நாயகிகளின் தேர்வு நடைபெற்றது. இதில் தற்போது கீர்த்தி சுரேஷ் நடிப்பார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

இந்த செய்தியை சில நாட்களில் படக்குழுவினர் உறுதிபடுத்துவார்கள் என்று தெரிகிறது.

share