Kollywood News

  • Home/
  • Cine News/
  • வில்லனாக சிம்பு....

வில்லனாக சிம்பு....

வெங்கட்பிரபு இயக்கத்தில் தற்போது ‘பார்ட்டி’ படம் ரிலீஸுக்குத் தயாராகி வருகிறது.

இந்தப் படத்துக்குப் பிறகு சிம்புவை வைத்து ‘மாநாடு’ படத்தை இயக்க இருக்கிறார் வெங்கட்பிரபு.

இதில், சிம்புவுக்கு நெகட்டிவ் கேரக்டர் எனத் தகவல் கிடைத்துள்ளது. கிட்டத்தட்ட ‘சொர்ணமுகி’ பார்த்திபன் போன்ற கேரக்டராம். சிம்புவின் நடிப்புக்கு இந்தப் படம் தீனியாக இருக்கும் என்கிறார்கள்.

மணிரத்னம் இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள ‘செக்கச்சிவந்த வானம்’ செப்டம்பர் 28-ம் தேதி ரிலீஸாக இருக்கிறது. ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ தோல்விக்குப் பிறகு ரிலீஸாகும் படம் என்பதால், சிம்புவின் ரசிகர்கள் இந்தப் படத்துக்காக ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

Read More about :

share