சிம்பு
தற்போது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் “அன்பானவன் அசராதவன் அடங்காதவன்”
என்னும் படத்தில் நடித்து வருகிறார். படத்தின் படப்பிடிப்பு அனைத்தும்
திண்டுக்கல்லில் படமாக்கப்பட்டு வருகிறது. இதில் சிம்பு மூன்று
கதாபாத்திரங்களை ஏற்று நடிக்கிறார்.
இதில்
ஒரு கெட்டப்பிற்காக தனது எடையை 90 கிலோ வரை ஏற்றிருக்கிறார். 1980 களில்
நடக்கும் கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். இந்த கெட்டப்பிற்கான
படப்பிடிப்பு நேற்றுடன் நிறைவடைந்தது.
அடுத்த
கெட்டப்பிற்கான படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது. இந்நிலையில்
இயக்குனர் ஆதிக் தனது ட்விட்டர் பக்கத்தில் சிம்புவின் கடின உழைப்பால்
மட்டுமே முதல் கட்ட படப்பிடிப்பு மிக விரைவில் எடுக்க முடிந்தது என்று
கூறியுள்ளார்.