Kollywood News

  • Home/
  • Cine News/
  • வசூலில் பட்டையை கிளப்பிய சிம்புவின் ‘அச்சம் என்பது மடமையடா’..!!

வசூலில் பட்டையை கிளப்பிய சிம்புவின் ‘அச்சம் என்பது மடமையடா’..!!



கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிம்புவின் நடிப்பில் கடந்த வெள்ளியன்று வெளியானது ‘அச்சம் என்பது மடமையடா’. பல போராட்டங்களுக்குப் பிறகு ஒரு வழியாக வெளிவந்தது இப்படம்.

இது ரசிகர்களிடையே நல்ல ஒரு வரவேற்பினை பெற்றது. மேலும், வசூலிலும் பட்டையை கிளப்பியது. சிம்புவின் படம் எப்போது வேண்டுமானாலும் வரட்டும், நாங்கள் காத்திருப்போம் என அவரது ரசிகர்களுக்கு அவருக்கு பக்க பலமாக இருப்பது மேலும் கூடுதல் சிறப்பாகும். 

இப்படம் வெளிவந்த மூன்று நாட்களில் மட்டும் 2.05 கோடி வசூல் செய்துள்ளதாம் இது சென்னையில் மட்டும். உலகம் முழுவதும் நல்ல ஒரு கலெக்‌ஷனை வாரிக் குவித்துள்ளது இப்படம்..

இது சிம்பு ரசிகர்களிடையே மிகுந்த உற்சாகத்தை கிளப்பியுள்ளது..

share