Kollywood News

  • Home/
  • Cine News/
  • ”உங்களுக்கு ஒரு அண்ணனாக நான் இருக்கிறேன்...” - இளைஞர்களுக்கு ஆதரவாக சிம்பு..!!

”உங்களுக்கு ஒரு அண்ணனாக நான் இருக்கிறேன்...” - இளைஞர்களுக்கு ஆதரவாக சிம்பு..!!


தமிழ்நாட்டில் பல வருடங்களாக நடத்தப்பட்டு வந்த ஜல்லிக்கட்டு உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. ஆனால் தமிழர்களின் பாரம்பரியத்தில் ஒன்றான அதை மீட்க தமிழகத்தைச் சேர்ந்த பல்வேறு பகுதிகளில் இருந்தும் தமிழர்கள் போராடி வருகிறார்கள்.

பல நட்சத்திரங்கள் ஜல்லிக்கட்டிற்கு தங்களது ஆதரவினை தெரிவித்து வருகின்றனர்.  இதற்கு சிம்பு ஏற்கனவே ஆதரவு தெரிவித்துவிட்டார். இந்நிலையில் இன்று ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நின்ற கல்லூரி மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். இதைக்கண்டு ஆத்திரமடைந்த சிம்பு, ” உங்களுக்கு ஆதரவாக ஒரு அண்ணனாக நான் இருக்கிறேன். இனிமேலும் என்னால் பொறுக்கமுடியாது” என கூறியிருந்தார்.

share