Kollywood News

  • Home/
  • Cine News/
  • சிம்பு திருமணம் எப்போது? கூட நடித்த பெண்ணை திருமணம் செய்கிறாரா?- டி.ராஜேந்தர் அதிரடி

சிம்பு திருமணம் எப்போது? கூட நடித்த பெண்ணை திருமணம் செய்கிறாரா?- டி.ராஜேந்தர் அதிரடி

தமிழ் சினிமாவில் இருக்கும் இளம் நடிகர்கள் எல்லாம் திருமணம் செய்துகொண்டு வருகிறார்கள். ஆர்யாவிற்கு முடிந்தது, விஷாலுக்கு விரைவில் நடக்க இருக்கிறது.

அடுத்து எல்லோரின் கேள்வியும் சிம்புவிடம் தான், ஆனால் அவரது திருமணத்திற்கு பதிலாக குறளரசன் திருமண செய்தி தான் டி.ராஜேந்தர் அவர்களின் வீட்டில் இருந்து வந்துள்ளது. இந்த மாதம் வரும் 26ம் தேதி சிம்புவின் தம்பிக்கு திருமணம் நடக்க இருக்கிறது.

சமீபத்தில் ஒரு பேட்டியில் டி.ராஜேந்தர் அவர்கள், எல்லோரும் சிம்பு திருமணம் பற்றி கேட்கிறார்கள். அவருடன் நடித்த பெண்ணை திருமணம் செய்து வைப்பதைவிட பிடிச்ச பெண்ணை திருமணம் செய்து வைக்க விரும்புகிறேன்.

சிம்புவிற்கு பொருத்தமான, ஜாதகம் பொருந்திய பெண்ணை பார்த்து வருகிறேன். விரைவில் இறைவன் அருளால் அவருக்கு பெண் கிடைக்கும் என நம்புகிறேன் என்று பேசியுள்ளார்.

Read More about :

share