Kollywood News

  • Home/
  • Cine News/
  • இனிமே இவர் ஆறு மாசத்துக்கு ஒரு படம் நடிக்க முடிவு. அது ஏன்?

இனிமே இவர் ஆறு மாசத்துக்கு ஒரு படம் நடிக்க முடிவு. அது ஏன்?

ராஜேஷ்.எம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா நடித்துள்ளப் படம் மிஸ்டர் லோக்கல். மிஸ்டர் லோக்கல் படம் வரும் 17ம் தேதி ரிலீசாகிறது. இதையொட்டி படக்குழுவினர் செய்தியாளர்களை சந்தித்தனர். 

அப்போது பேசிய நடிகர் சிவகார்த்திகேயன், இனி ஆறு மாதத்துக்கு ஒரு படம் தருவேன் எனக் கூறினார். 

மேலும் மிஸ்டர் லோக்கல் திரைப்படம் ரசிகர்களை மகிழ்விக்கும் நோக்கத்துடன் எடுக்கப்பட்டுள்ள படம்.

மக்களுக்கு மிகவும் பிடித்த நிறைய நடிகர்கள் இதில் இருக்கிறார்கள். இந்த படம் இயக்குனர் ராஜேஷின் ஸ்டைலில் தான் இருக்கும்.

இது நாள் வரை நான் வருடத்துக்கு ஒரு படம் என்று தான் கொடுத்து வந்தேன். ஆனால் இனி ஆறு மாதத்துக்கு ஒரு படம் தர திட்டமிட்டுள்ளேன். நல்ல கருத்துள்ள படங்களாக அவை இருக்கும். இந்த புதிய முயற்சி நிச்சயம் ஒர்க்கவுட் ஆகும் என நான் நினைக்கிறேன் என்று கூறினார்

Read More about :

share