Kollywood News

  • Home/
  • Cine News/
  • மீண்டும் சிவகார்த்திகேயன் ஜோடியாகிறார் நயன்தாரா!

மீண்டும் சிவகார்த்திகேயன் ஜோடியாகிறார் நயன்தாரா!



இன்று நேற்று நாளை ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்க உள்ள சிவகார்த்திகேயன், தற்போது பொன்ராம் இயக்கத்தில் நடித்து வருகிறார். இவ்விரு படங்களுக்குப் பிறகு அவர் நடிக்கும் படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

காத்துவாக்குல ரெண்டு காதல் என்ற தலைப்பு பரிசீலனையில் இருக்கிறது. விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நானும் ரவுடிதான் படத்தில் நடித்திருந்த நயன்தாரா,  இந்தப் படத்தில், வேலைக்காரன் படத்துக்குப் பிறகு மீண்டும் சிவகார்த்திகேயன் ஜோடியாக நடிப்பார் என்று கூறப்படுகிறது 

share