தமிழ் சினிமாவில் இவரை பிடிக்கவில்லை என்று யாரும் கூறமாட்டார்கள். அந்த அளவிற்கு அனைவரின் மனதையும் கொள்ளையடித்தவர் நம்ம தல ‘அஜித்’தான்.
சிவகார்த்திகேயன் நடிப்பில் வரும் வெள்ளியன்று வெளியாக இருக்கிறது வேலைக்காரன். படத்தின் ப்ரோமோஷன் பணியில் மிகவும் பிஸீயாக இருக்கும் சிவகார்த்திகேயனிடம் நடிகர் அஜித்தை ஏன் உங்களுக்கு பிடிக்கிறது என கேட்ட போது, ‘தல அஜித் சார் என்னை பார்க்கும் போதெல்லாம் ஊக்கமளித்து கொண்டே இருப்பார். அவருடைய ஊக்கம் எனக்கு மகிழ்ச்சியையும் புத்துணர்ச்சியையும் கொடுக்கும் என கூறியுள்ளார். மேலும் அஜித் சார் மிக சிறந்த மனிதர்.’ எனவும் கூறியுள்ளார்.