Kollywood News

  • Home/
  • Cine News/
  • புலிக்குப்பிறந்தது பூனையாகுமா : சிவகார்த்திகேயன் மகள்

புலிக்குப்பிறந்தது பூனையாகுமா : சிவகார்த்திகேயன் மகள்

கோலிவுட் திரையுலகின் மாஸ் ஸ்டார்களில் ஒருவரான சிவகார்த்திகேயன் மகள் ஆராதனாவும் தற்போது சினிமாவில் அறிமுகமாகியுள்ளார்.

'கனா' படத்தில் ஒரு பாடலை இவர் பாடியுள்ளார். சிவகார்த்திகேயன் இப்படத்தின் மூலம் தயாரிப்பாளராக மாறியிருக்கிறார். நடிகர், பாடலாசிரியர், பாடகர் எனப் பன்முகங்கள் கொண்டவருமான அருண்ராஜா காமராஜ், இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.

தந்தைக்கும் மகளுக்கும் இடையே உள்ள அன்பை, பாசத்தைப் பதிவு செய்யும் விதமாக வாயாடி பெத்த புள்ள என்ற பாடல் இடம்பெற்றுள்ளது. அதை ஆராதனா பாடியுள்ளார்.

சிவகாத்திகேயனுக்கு கிடைத்த வெற்றியை போல் ஆராதனாவும் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

Read More about :

share