மீண்டும் இணையும் நயன்தாரா சிவகார்த்திகேயன் ஜோடி!'வேலைக்காரன்' படத்தினை அடுத்து, விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் நயன்தாரா ஆகியோர் மீண்டும் ஜோடியாக இணையவுள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு ஜனவரியில் தொடங்கவுள்ளது. 

ஆனால், அதற்கு முன்னர் இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் துவங்கப்படலாம் என தெரிகிறது. இந்த படத்தில் இரண்டு கதாநாயகிகள் நடிக்கின்றனர். அவற்றில் ஒருவர் நடிகை நயன்தாரா. இன்னொருவர் குறித்த தகவல் மிக விரைவில் அறிவிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. மேலும், இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார்.

share