Kollywood News

  • Home/
  • Cine News/
  • விக்னேஷ் சிவனின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன்!

விக்னேஷ் சிவனின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன்!

சிம்புவின் "போடா போடி", விஜய் சேதுபதியுடன் 'நானும் ரௌடிதான்' சூரியனுடன் 'தாணா சேர்ந்த கூட்டம்' ஆகிய படங்களை இயக்கிய விக்னேஷ் சிவன் அடுத்து இயக்கும்புதிய படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க இருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. 

விக்னேஷ் சிவன் சிவகார்த்திகேயனும் முதன் முதலாக இணையும் இந்த படத்தை `லைகா புரொடக்ஷன்ஸ்` தயாரிக்க உள்ளதாகவும் அனிருத் இசையில் உருவாகிறது என்று கூறப்படுகிறது. எப்போதும் வித்தியாசமான தலைப்பைத்தான் சூடுவர் விக்னேஷ் சிவன் இப்படத்திற்கு மூன்று எழுத்தில் சொல்லக் கூடிய வகையில் ஒரு டைட்டிலை முடியு செய்துள்ளாராம். 

சிவகார்த்திகேயன் ஆர்.ரவிக்குமார், எம்.ராஜேஷ் இயக்கும் படங்களின் படப்பிடிப்பு வேலைகள் முடிந்ததும், அடுத்து ஆண்டு இறுதியில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்க சிவகார்த்திகேயன் தேதிகள் ஒதுக்கியுள்ளார் என்கிறார்கள். 

இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Read More about :

share