Kollywood News

  • Home/
  • Cine News/
  • தனுஷை ஒதுக்கி சிவகார்த்திகேயனுக்கு சம்மதித்த சமந்தா..!!

தனுஷை ஒதுக்கி சிவகார்த்திகேயனுக்கு சம்மதித்த சமந்தா..!!


தனுஷ் தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் வட சென்னை படத்தில் நடித்து வருகிறார். படப்பிடிப்பு சென்னையில் உள்ள ஒரு தனியார் அரங்கில் நடைபெற்று வருகிறது. படத்தில் நாயகியாக அமலாபால் மற்றும் ஆண்ட்ரியா நடித்து வருகின்றனர்.

முதலில் தனுஷிற்கு ஜோடியாக சமந்தாவை அணுகினர் படக்குழுவினர். ஆனால் சமந்தா  நோ சொல்லிவிட்டார். தற்போது சிவகார்த்திகேயன், பொன்ராம் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார்.

இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சமந்தாவை ஒப்பந்தம் செய்ய படக்குழுவினர் அணுகியபோது உடனே ஓகே என சொல்லிவிட்டாராம் சமந்தா.

தனுஷிற்கு நோ சொல்லிவிட்டு, சிவகார்த்திகேயனுக்கு ஓகே என சமந்தா கூறியதால் பெரும் சர்ச்சை கிளம்பியுள்ளது...

share