சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு காத்திருக்கும் அடுத்த விருந்து!


சிவகார்த்திகேயன் நடிப்பில் மோகன்ராஜா இயக்கத்தில் உருவாகி வருகிறது ‘வேலைக்காரன்’. படத்தின் அநேக படப்பிடிப்பு முடிவடைந்துவிட்ட நிலையில் படத்தின் போஸ்ட் ப்ரொடக்‌ஷன் பணிகள் மிகவும் வேகமாக நடைபெற்று வருகிறது. 

இப்படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயனின் ஆஸ்தான இயக்குனரான பொன்ராம் இயக்கத்தில் மீண்டும் நடிக்கவிருக்கிறார். இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சமந்தா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். 

இம்மாதம் 16 ஆம் தேதி முதல் இதன் படப்பிடிப்பு துவங்கப்படவுள்ளது. அடுத்த வருட பொங்கல் விடுமுறையில் படத்தினை திரைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளனர். 

share