Kollywood News

  • Home/
  • Cine News/
  • சரவணன் மீனாட்சி புகழ் ரியோ ராஜ் படத்தை தயாரிக்கும் சிவகார்த்திகேயன்!

சரவணன் மீனாட்சி புகழ் ரியோ ராஜ் படத்தை தயாரிக்கும் சிவகார்த்திகேயன்!

கனா படத்தைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் தனது தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் 2வது படத்தின் தயாரிப்பை இன்று பூஜையுடன் தொடங்கியுள்ளார். 

கனா படத்தைத் தொடர்ந்து 2வது படத்திற்காக பூஜையை இன்று தொடங்கியுள்ளார். சிவகார்த்திகேயன் புரோடக்‌ஷன்ஸ் நிறுவனத்தின் மூலம் இப்படத்தை தயாரிக்கிறார். அதற்கான பட பூஜை இன்று நடந்துள்ளது. 

இப்படத்தில் சரவணன் மீனாட்சி புகழ் சரவணன் (உண்மையான பெயர் ரியோ ராஜ்) ஹீரோவாக நடிக்கிறார். இது குறித்து தயாரிப்பு நிறுவனத்தின் டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: உங்களது வாழ்த்துக்கள் மற்றும் ஆதரவுகளுடன் 2வது படத்தின் தயாரிப்பை இன்று பூஜையுடன் தொடங்குகிறோம். 

இப்படத்தை இயக்குனர் கார்த்திக் வேணு இயக்குகிறார். ரியோ ராஜ், ஷெரின் காஞ்ச்வாலா, ராதா ரவி, ஆர்.ஜே.விக்னேஷ் காந்த் ஆகியோர் பலர் நடிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

share