Kollywood News

  • Home/
  • Cine News/
  • வேலைக்காரர்களை வைத்து வேலைக்காரன் இசையை வெளியிட்ட சிவகார்த்திகேயன்!!

வேலைக்காரர்களை வைத்து வேலைக்காரன் இசையை வெளியிட்ட சிவகார்த்திகேயன்!!


24ஏஎம் ஸ்டுடியோஸ் சார்பில் ஆர்டி ராஜா தயாரிப்பில் மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்க மிக பிரமாண்டமாக உருவாகியிருக்கும் படம் 'வேலைக்காரன்'. ராக்ஸ்டார் அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா மிக பிரமாண்டமாக சென்னையில் நடைபெற்றது. 

நடிகர்கள் ரோபோ ஷங்கர், சதீஷ், ஆர் ஜே பாலாஜி, காளி வெங்கட், மன்சூர் அலிகான், விஜய் வசந்த், கலை இயக்குனர் முத்துராஜ், ஒளிப்பதிவாளர் ராம்ஜி, தயாரிப்பாளர் ஆர் டி ராஜா ஆகியோர் விழாவில் கலந்து கொண்டு பேசினர்.

7 வேலைக்காரர்களை தேர்வு செய்து அவர்களை மேடைக்கு அழைத்து அவர்கள் முன்னிலையில் வேலைக்காரன் படத்தின் இசை வெளியிடப்பட்டது. முன்னதாக அனிருத்தின் லைவ் பெர்ஃபார்மென்ஸ் மற்றும் நடன நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. நவீன் மிமிக்ரி, ராஜ்மோகன் பேச்சு, லேசர் ஒளி அலங்காரம் என விழா மிக பிரமாண்டமாக நடைபெற்றது. விஜய் டிவி திவ்யதர்ஷினி மற்றும் ஆர் ஜே விக்னேஷ் விழாவை தொகுத்து வழங்கினர்.

share