Kollywood News

  • Home/
  • Cine News/
  • விஜய் சேதுபதி பட பாணியில் சிவகார்த்திகேயன் பட விளம்பரம்:

விஜய் சேதுபதி பட பாணியில் சிவகார்த்திகேயன் பட விளம்பரம்:

சூப்பர் டீலக்ஸ் ஸ்டைலில் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவாகும் படத்தின் டைட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

கனா பட வெற்றியை அடுத்து பிரபல தொலைக்காட்சியின் நிகழ்ச்சித் தொகுப்பாளர் ரியோராஜை ஹீரோவாக வைத்து தனது இரண்டாவது படத்தை துவங்கினார் சிவகார்த்திகேயன். இந்தப் படத்தை யூடியூபில் பிரபலமான பிளாக் ஷீப் புகழ் கார்த்திக் இயக்கியுள்ளார். படத்தில் ரியோவுக்கு ஜோடியாக ஷெரின் நடிக்கிறார். இவர்களுடன் நடிகர் ராதாரவி, ஆர்.ஜே.விக்னேஷ் மற்றும் பிளாக் ஷிப்பில் பணியாற்றும் நடிகர்கள்  உள்ளீட்ட பலரும் நடிக்கின்றனர். கடந்த ஆண்டின் இறுதியில் துவங்கிய இந்தப் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. 

இந்நிலையில் படத்துக்கு ''நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடுராஜா'' என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இதற்கான விளம்பரத்துக்காக நடிகர் விஜய்சேதுபதியின் சூப்பர் டீலக்ஸ் பட டீசரை படக்குழு பயன்படுத்தியுள்ளது.

share