Kollywood News

  • Home/
  • Cine News/
  • எஸ் ஜே சூர்யாவோடு ஜோடி சேரும் ப்ரியா பவானி ஷங்கர்!

எஸ் ஜே சூர்யாவோடு ஜோடி சேரும் ப்ரியா பவானி ஷங்கர்!


சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு சென்று 'மேயாத மான்' என்ற படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் பிரியா பவானி ஷங்கர். அறிமுகமான இப்படத்தில் இவருக்கு அமோக வரவேற்பு கிடைத்தது. 

தற்போது கார்த்திக் நடித்து கொண்டிருக்கும் 'கடைக்குட்டி சிங்கம்' என்னும் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மேலும்,  விஜய் சேதுபதியின் ஜுங்காவிலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் அடுத்து அவர் எஸ்.ஜே.சூர்யாவுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். ஒருநாள்கூத்து படத்தை இயக்கிய நெல்சன் வெங்கடேஷ் இந்த படத்தை இயக்கவுள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கிறது 

share