Kollywood News

  • Home/
  • Cine News/
  • அந்த நடிகரை தான் எனக்கு மிகவும் பிடிக்கும் - சினேகா...

அந்த நடிகரை தான் எனக்கு மிகவும் பிடிக்கும் - சினேகா...


ஒரு சமயத்தில் தமிழ் சினிமாவில் அழகு ராணியாக வலம் வந்தவர் புன்னகை இளவரசி சினேகா. தற்போது நடிகர் பிரசன்னாவை திருமணம் செய்து நடிப்பிற்கு முழுக்கு போட்டு விட்டு ஒரு குழந்தைக்கு தாயானார். தற்போது மீண்டும் கோலிவிட்டில் கால் பதிக்க களம் இறங்கியுள்ளார் சினேகா.

மோகன்ராஜா இயக்கவுள்ள படத்தில் சினேகா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். சிவகார்த்திகேயன் ஹிரோவாக நடிக்கவிருக்கும் இந்த படத்தில் நயன்தாரா நாயகியாக நடிக்கவிருக்கிறார்.

இவர் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நடைபெறும் நிகழ்ச்சியில் நடுவராக இருந்து வருகிறார். அந்த நிகழ்ச்சியில் பேசிய சினேகா தமிழ் சினிமாவில் தற்போதைய உள்ள ஹீரோக்களில் விஜய் சேதுபதியை தான் மிகவும் பிடிக்கும். அவர் ஒரு ரியல் நடிகர். அவரிடம் ஹீரோயிசம் இல்லை. அவரது கதை தேர்வும், வசனம், நடிப்பு என அனைத்தும் புதுமையாக உள்ளது.’ என்றார்.

share