Kollywood News

  • Home/
  • Cine News/
  • தல அஜித் ரசிகர்கள்க்கு வரப்போகும் தல பொங்கல்

தல அஜித் ரசிகர்கள்க்கு வரப்போகும் தல பொங்கல்

`தங்கமா வைரமா' பாடல் மூலம் தமிழ் சினிமாவில் பாடலாசிரியராக அறிமுகமானவர் கவிஞர். அருண்பராதி. தொடர்ந்து விஜய் ஆண்டனியின் காளி, திமுருப்பிடிச்சவன், கொலைகாரன் ஆகிய படங்களுக்கு பாடல்கள் எழுதியதோடு மட்டுமல்லாமல் தற்பொழுது சண்டக்கோழி-2, களவாணி-2, தில்லுக்கு துட்டு-2, தல அஜித்தின் `விஸ்வாசம்' என பல திரைப்படங்களுக்கு பாடல்கள் எழுதி தற்பொழுது வேகமாக வளர்ந்து வரும் இளம் பாடலாசிரியராக அறியப்படுகிறார்.

மேலும் விஸ்வாசம் பர்ஸ்ட்லுக் போஸ்டர்  வெளியானதைக் குறித்துக் கேட்கும் பொழுது, என் வாழ்வில் மறக்க முடியாத நாள் இது. என் பாடல் பயணத்தின் அடுத்த கட்டத்தை துவக்கி வைத்துள்ளார் இயக்குனர். சிவா அவர்கள் என்று நன்றி பாராட்டினார்.

இயக்குனர் சிவா மற்றும் தல அஜித் நான்காவது முறையாக இணையும் விஸ்வாசம் திரைப்படத்தில் இசையமைப்பாளர் இமான் இசையில் இரண்டு பாடல்கள் எழுதி உள்ளன என்றும் பாடல்கள் அனைத்தும் சிறப்பாக வந்துள்ளது என்று அவர்  குறிப்பிட்டார். 

தல அஜித் அவர்களின் ரசிகர்கள் அனைவர்க்கும் வரப்போகும் பொங்கல் தல பொங்கலாகவே அமையப்போகிக்கிறது என்று கூறிய அருண்பராதி தொடர்ந்து பாடல்கள் மற்றும் இலக்கியத்தில் நல்ல படைப்புகளை கொடுத்து அடையாளப்பட்டு வருகிறார்.

இந்த நேரத்தில் தனக்கு வாய்ப்பளித்த இயக்குனர் கே.பாக்யராஜ், லிங்குசாமி, சிறுத்தைசிவா, கிருத்திகாஉதயநிதி, விஜய்ஆண்டனி, யுவான்சங்கர் ராஜா, இமான் என அனைவர்க்கும் நன்றிக்கடன் பட்டுள்ளேன் என்று கூறும் அருண்பராதி தற்பொழுது  கோடம்பாக்கத்தில்   குறிப்பிடத் தகுந்த கவிஞராக மாறியிருக்கிறார்.      

Read More about :

share