நடிகை ஸ்ரீதேவி திடீர் மரணம் - துபாயில் நடந்தது என்ன...?துபாயில் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்ற பிரபல நடிகை ஸ்ரீதேவி திடீர் மாரடைப்பால் காலமானார். அவரது கடைசி நிமிடங்களில் என்ன நடந்தது என்பது குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

நடிகை ஸ்ரீதேவி, அவரது கணவர் போனி கபூர், மகள் குஷி கபூருடன், கடந்த வாரம் துபாயில் உள்ள ராஸ் அல் காய்மா பகுதியில் நடந்த திருமண நிகழ்ச்சிக்கு சென்றார். நிகழ்ச்சி முடிந்ததும் போனி கபூர் மட்டும் மும்பை திரும்பி உள்ளார். ஸ்ரீதேவிக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்க நினைத்த போனி கபூர், ஸ்ரீதேவிக்கு தெரிவிக்காமல் சனிக்கிழமை மீண்டும் துபாய் சென்றார்.

ஸ்ரீதேவியின் அறைக்கு சென்ற போனி கபூர், அவருடன் 15 நிமிடங்கள் வரை பேசிக் கொண்டிருந்தார். பின்னர் இரவு விருந்துக்கு ஸ்ரீதேவியை அழைத்துள்ளார். இதையடுத்து தயாராகி வருவதாக கூறி குளியலறை சென்ற ஸ்ரீதேவி நீண்ட நேரமாக வரவில்லை. 

கதவை தட்டியும் திறக்கவில்லை. இதனால், அதிர்ச்சியடைந்த போனி கபூர், கதவை உடைத்து உள்ளே சென்றபோது, அங்கு ஸ்ரீதேவி குளியல் தொட்டியில் மயங்கி கிடந்ததாக கூறப்படுகிறது.

Read More about :

share