Kollywood News

  • Home/
  • Cine News/
  • பிரபல நடிகை ஸ்ரீதேவி காலமானார்!

பிரபல நடிகை ஸ்ரீதேவி காலமானார்!



துபாயில் நடைபெற்ற திருமணம் ஒன்றில் கலந்து கொள்வதற்காக கணவர் மற்றும் மகளுடன் சென்றிருந்த ஸ்ரீதேஇக்கு நேற்றிரவு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிர் பிரிந்தது. அவரது உயிர் பிரியும்போது கணவர் போனிகபூர் மற்றும் மகள் குஷிகபூர் உடனிருந்தனர்.

குழந்தை நட்சத்திரமாக தமிழில் அறிமுகமான நடிகை ஸ்ரீதேவி, சிவாஜி கணேசன், ரஜினிகாந்த், கமல்ஹாசன், அமிதாப்பச்சன் உள்பட இந்தியாவில் உள்ள முன்னணி நட்சத்திரங்கள் பலருடன் இணைந்து நடித்துள்ளார். 

பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் போனிகபூரை திருமணம் செய்தவுடன் திரையுலகில் இருந்து விலகியிருந்த ஸ்ரீதேவி, நீண்ட இடைவெளிக்கு பின் இங்கிலிஷ் விங்கிலிஷ், புலி, மாம் போன்ற படங்களில் நடித்தார்.

ஸ்ரீ தேவியின் இழப்பு ஈடுகட்ட முடியாத ஒன்று என திரையுலக நட்சத்திரங்கள் பலர் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். 

Read More about :

share