பேய் பார்த்து எனக்கு எந்த பயமும் இல்லை - ஸ்ரீ திவ்யா!ஐக் இயக்கத்தில் ஜீவா, ஸ்ரீதிவ்யா நடித்துள்ள படம் ‘சங்கிலி புங்கிலி கதவ தொற’. காமெடியுடன் கூடிய திகில் படமான இதில், ஹோம்லி கேரக்டரில் போல்டான பெண்ணாக நடித்திருக்கிறாராம் ஸ்ரீதிவ்யா. கரப்பான் பூச்சிக்கே பயப்படும் பெண்கள், பேய்க்குப் பயப்பட மாட்டார்களா என்ன? பொதுவாகவே பேய்ப் படங்கள் பார்ப்பதென்றால் ஸ்ரீதிவ்யாவுக்கு அவ்வளவு பயமாம். 

அதனால், பேய்ப் படங்கள் பார்ப்பதையே தவிர்த்து விடுவாராம். ஆனால், இந்தப் படத்தில் நடித்தபிறகு பேய் மீதான பயம் போய்விட்டதாம். காரணம் என்ன? “எனக்கு முன்னாடி தான் பேயாக நடிப்பவருக்கு மேக்கப் போட்டார்கள். இந்தப் படத்தின் மூலம் பேய்ப் படங்கள் எப்படி எடுக்கிறார்கள் எனத் தெரிந்து கொண்டேன். அதனால், எனக்கு பயம் போய்விட்டது” என்கிறார் ஸ்ரீதிவ்யா.

share