Kollywood News

  • Home/
  • Cine News/
  • ஸ்ரீரெட்டியின் அடுத்த செக்! எந்த நடிகர் தெரியுமா?

ஸ்ரீரெட்டியின் அடுத்த செக்! எந்த நடிகர் தெரியுமா?

நடிகைகளை பாலியல் வன்முறைக்கு ஆளாக்கும் சினிமா பிரபலங்களை பாடகி சுஜி அவர்கள் சில மாதங்களுக்கு முன்பு வெளியிட்டு பல பரபரப்புகளை தினம் தினம் நிகழ்த்திவந்தார். அந்த பரபரப்பு முழுமையாய் ஓய்ந்துவிட்ட நிலையில் வளர்ந்து வரும் புது நடிகையான ஸ்ரீரெட்டி அவர்கள் தெலுங்கு சினிமா துறையில் இது போன்ற தவறுகளை செய்யும் சினி பிரபலங்களை ஒன்றன் பின் ஒன்றாக தினம் தினம் அடையாளம் காட்டி வருகிறார்.



தற்போது இவரது பார்வை தமிழ் திரையுலகம் மீது திரும்பி மிகப்பெரிய சர்ச்சைகளை கிளப்பிவருகிறது.


வரிசையாக ராகவா லாரன்ஸ், விஷால், இயக்குனர் முருகதாஸ் என்று பல பிரபலங்களை வெளிக்காட்டி வரும் இவர் தற்போது யாருடா மகேஷ், மாநகரம், மாயவன் படங்களில் ஹீரோவாக நடித்த சந்தீப் கிசான் மீது பாலியல் புகார் வெளியிட்டுள்ளார்.



அதுவும் இதுவரை யாரையும் சொல்லாத அளவிற்கு “இந்த உலகத்திலேயே மிகவும் தவறான மோசமான அணுகுமுறை கொண்ட கீழ்த்தனமான  மனிதன்” என்று சந்தீப்பை பொரிந்து தள்ளியுள்ளார் ஸ்ரீ ரெட்டி.


இவருக்கு ஆதரவாக குரல் கொடுத்து வரும் டி.ஆர்  அவர்களை காலில் விழுந்து எனது நன்றியையும் மரியாதையையும் தெரிவிப்பேன் என்று கூறியுள்ளார் ஸ்ரீரெட்டி.


Read More about :

share