Kollywood News

  • Home/
  • Cine News/
  • கமலுடன் இணையும் சிம்பு..!

கமலுடன் இணையும் சிம்பு..!

’இந்தியன் 2’ படத்தில் கமலஹாசனுடன் முக்கியமான கதாபாத்திரத்தில் சிம்பு இணைகிறார் என்று தகவல் வெளியானது.

கமல்ஹாசன் நடிப்பில் உருவாகும் இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கவுள்ளது. கமலின் பிறந்த நாளின் போது, இப்படம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது லைகா.

 ’இந்தியன் 2’ படத்தில் சிம்பு என்றவுடன், அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். இது குறித்து சிம்பு தரப்பில் விசாரித்த போது, “எங்களுக்கு எதுவும் தெரியாது. இப்படியொரு விஷயம் நடந்தால் மகிழ்ச்சியே” என்று சொல்லி முடித்துக் கொண்டார். இயக்குநர் ஷங்கர் தரப்பில் கேட்ட போது, “இன்னும் எதுவுமே முடிவாகவில்லை. விரைவில் அறிவிப்போம் என்று தெரிவித்தார்.

எழுத்தாளர்கள் ஜெயமோகன், கபிலன் வைரமுத்து, லட்சுமி சரவணகுமார் மூவரும் இணைந்து ‘இந்தியன் 2’வுக்கான வசனங்களை எழுதியுள்ளனர்.

Read More about :

share