Kollywood News

  • Home/
  • Cine News/
  • விஜய்சேதுபதி வருகைக்காக தனி விமானம்

விஜய்சேதுபதி வருகைக்காக தனி விமானம்

சென்னை `பேட்ட' பட இசை வெளியீட்டு விழாவிற்கு நடிகர் விஜய்சேதுபதி சில நிமிடங்கள் தாமதமாக வந்தார். அவர் வரும்போது சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் கலாநிதிமாறன் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரும் எழுந்து நின்று வரவேற்றனர்.

மக்கள்செல்வன் விஜய்சேதுபதி இந்த விழாவிற்கு தாமதமாக வந்ததற்கான காரணம் தெரிய வந்தது. இந்த விழா நடைபெறும்போது விஜய்சேதுபதி ஒகேனக்கலில் ஷாட்டிங்கில் இருந்ததாகவும், அவர் சென்னை திரும்ப வர வசதியாக தனி விமானம் ஒன்றை சன்பிக்சர்ஸ் நிறுவனம் ஏற்பாடு செய்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மக்கள்செல்வன் விஜய்சேதுபதி தனிவிமானத்தில் பைலட்டுடன் உள்ள புகைப்படங்கள் தற்போது வைரலாகியுள்ளது. இந்த விழாவில் விஜய்சேதுபதி கண்டிப்பாக கலந்து கொள்ள வேண்டும் என்று சன்பிக்சர்ஸ் நிறுவனம் இந்த ஏற்பாட்டை செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Read More about :

share