Kollywood News

  • Home/
  • Cine News/
  • சூப்பர் ஸ்டாரின் பாராட்டை பெற்ற ராட்சசன்

சூப்பர் ஸ்டாரின் பாராட்டை பெற்ற ராட்சசன்

இயக்குநர் ராம்குமார் இயக்கத்தில் முதன் முறையாக விஷ்ணு விஷால் - அமலாபால் ஜோடி சேர்ந்து நடித்திருக்கும் படம் ராட்சசன். இப்படத்தில் முனிஷ்காந்த் ராமதாஸ், ராதாரவி, நிழல்கள் ரவி, காளி வெங்கட், கஜராஜ் வினோதினி, சூசன் ஜார்ஜ், மோனிகா, ப்ரியா, த்ரிஷாலா மற்றும் தங்கம் ஆகியோர் நடித்துள்ளனர். 'சைக்கோ கில்லருக்கும் - ஈகோ போலீசுக்கும்' இடையே நடக்கும் யுத்தமாக காட்சிப்படுத்தப்பட்டுள்ள இப்படம் தற்போது வசூலில் மிகப்பெரிய வெற்றிபெற்றுள்ளது.

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் ராட்சசன் படத்தை பார்த்துவிட்டு விஷ்ணு விஷாலுக்கு போன் செய்து வெகுவாக பாராட்டியுள்ளார்.

"படம் ஃபென்டாஸ்டிக்கா இருக்கு, நடிப்பில் தூள் கெளப்பிட்டீங்க, போலீஸ் யூனிஃபார்ம் செம பிட்" என்று சூப்பர்ஸ்டார் பாராட்டியதாக விஷ்ணு விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

Read More about :

share