Kollywood News

  • Home/
  • Cine News/
  • தலைவர் ரஜினிகாந்த் பேரனுடன் ஆட்டோவில் பயணம்!!!

தலைவர் ரஜினிகாந்த் பேரனுடன் ஆட்டோவில் பயணம்!!!

தலைவர் ரஜினிகாந்த், தனது பேரனின் ஆசைக்காக, பேரனுடன் ஆட்டோவில் பயணித்துள்ளார். 
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ‘பேட்ட’ படத்தில் நடித்து வந்த நடிகர் ரஜினிகாந்த், படப்பிடிப்பு முடிந்து, நேற்று சென்னை திரும்பினார். இதையடுத்து, ஆழ்வார்பேட்டையில் உள்ள தனது மருமகன் தனுஷின் வீட்டிற்குச் சென்றுள்ளார். அப்போது, தனது பேரன் வேத் விருப்பத்திற்கேற்ப, தனது போயஸ் கார்டன் இல்லத்திலிருந்து ஆட்டோவில் ஆழ்வார்பேட்டைக்குப் பயணித்தார்.தனுஷ் இல்லத்தில் சுமார் 2 மணிநேரம் இருந்த நடிகர் ரஜினிகாந்த், பிறகு மீண்டும் போயஸ் கார்டனுக்கு தனது காரில் சென்றார். அங்கு, அவர் வீட்டின் முன் திரண்டு இருந்த ரசிகர்களுக்கு கை காட்டியபடியே வீட்டிற்குள் சென்றார்.

Read More about :

share