Kollywood News

  • Home/
  • Cine News/
  • சூப்பர் ஸ்டார்களின் கூட்டணி

சூப்பர் ஸ்டார்களின் கூட்டணி

               நம்ம சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பேட்ட படத்தோட வெற்றிக்கு அப்புறம் நடிக்கிற படம் "தலைவர் 166". இந்த படத்தின் இயக்குனர் AR.முருகதாஸ். 1991 ல் வெளிவந்த தளபதி படத்திற்கு பிறகு ரஜினியை கேமராவில் படம்பிடிக்க போகிறவர் சந்தோஷ் சிவன். லைக்கா நிறுவனம் படத்தை தயாரிக்கிறது. இவர்களை தவிர படக்குழுவினர் யாரையும் ஒப்பந்தம் செய்யாத நிலையில். படத்தின் நாயகியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவை நடிக்கவைக்கப்போவதாகவும். படத்திற்கு இசையமைக்க அனிருத் ஒப்பந்தம் செய்யப்படுவர் என்றும் தகவல்கள் வந்தவண்ணம் உள்ளன. 


               படத்தில் ரஜினிகாந்த் 2 வேடங்களில் நடிப்பார் என்றும்; காவல்துறை அதிகாரியாகவும், சமூக ஆர்வலராகவும் 2 வேடங்களில் நடிக்க இருக்கிறார். தனது சினிமா அனுபவத்தில் ரஜினிகாந்த் 15க்கும் மேற்பட்ட படங்களில் இரட்டை வேடம் ஏற்று நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

Read More about :

share