Kollywood News

  • Home/
  • Cine News/
  • 10 ஆயிரம் திரையரங்குகளில் திரையிட இருக்கும் சூப்பர்ஸ்டாரின் 2.O

10 ஆயிரம் திரையரங்குகளில் திரையிட இருக்கும் சூப்பர்ஸ்டாரின் 2.O

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், அக்‌ஷய் குமார், எமி ஜாக்சன் ஆகியோர் பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 2.0. தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி என்று பல மொழிகளில் உருவாகியுள்ள இப்படம் வரும் 29ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது. 

லைகா நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த நிலையில், படம் வெளியாகும் போதே சாதனையுடன் வெளியாகிறது.

ஆம், இதுவரை எந்தப் படமும் வெளியாகாத அளவிற்கு கிட்டத்தட்ட 10 ஆயிரம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது.

Read More about :

share