Kollywood News

  • Home/
  • Cine News/
  • போட்டியில் களம் இறங்கும்: விஸ்வாசம், பேட்ட

போட்டியில் களம் இறங்கும்: விஸ்வாசம், பேட்ட

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கி உருவான ‘பேட்ட’ படத்தில் தற்போது ரஜினிகாந்த் நடித்து வருகிறார். இந்த படத்தில் சிம்ரன், த்ரிஷா, விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, நவாசுதீன் சித்திக், குரு சோமசுந்தரம், சனந்த் ரெட்டி, மகேந்திரன், மேகா ஆகாஷ், சசிக்குமார் இவர்களும் நடிக்கின்றனர். 

பெரிய நட்சத்திர பட்டாளங்கள் நடிக்கும் படமாக தயாராகி வரும் ‘பேட்ட’ படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.

இந்த தருணத்தில், பேட்ட படத்தின் புதிய போஸ்டர் ஒன்று வெளியானதில் ரஜினிகாந்த் மற்றும் சிம்ரன் இருவரும் கையில் பூச்செண்டு வைத்திருக்கும் விதமாக இந்தப் போஸ்டர் வெளியானது. அதோடு, படம் வரும் பொங்கல் பண்டிகைக்கு அன்று வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பொங்கல் தினத்தன்று தல அஜித் நடிப்பில் உருவாகியுள்ள விஸ்வாசம் படமும் வெளியாகிறது. இந்த இரு படங்களுமே மாஸ் ஹீரோக்களின் படங்கள் என்பதால், தியேட்டர் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றன.
 

share