Kollywood News

  • Home/
  • Cine News/
  • ‘இறுதிச்சுற்று’ இயக்குனர் சுதா இயக்கத்தில் சூர்யா:Suriya in 'Survival' Director Sudha:

‘இறுதிச்சுற்று’ இயக்குனர் சுதா இயக்கத்தில் சூர்யா:Suriya in 'Survival' Director Sudha:

‘தானா சேர்ந்த கூட்டம்‘ படத்துக்குப் பிறகு நடிகர் சூர்யா நடித்து முடித்திருக்கும் திரைப்படம், ‘என்.ஜி.கே’. செல்வராகவன் இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக, ரகுல் ப்ரீத்சிங் மற்றும் சாய் பல்லவி, நடித்திருக்கின்றனர். 

இதுதவிர, கே.வி.ஆனந்த் இயக்கத்தில் ‘காப்பான்’ படத்திலும் நடித்திருக்கிறார். இந்தப் படத்தின் மூலமாக சூர்யா மூன்றாவது முறையாக கே.வி.ஆனந்துடன் இணைத்துவுள்ளார். இதில், மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் மற்றும் ஆர்யா, சயீஷா உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.

இந்நிலையில், சூர்யா நடிக்கும் அடுத்த படத்தை ‘இறுதிச்சுற்று’ இயக்குனர் சுதா இயக்குகிறார். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்குகிறார். இந்நிலையில், படத்தின் இயக்குநர் சுதாவுடன் அஜ்மீர் தர்காவுக்கு சென்றிருக்கிறார் சூர்யா. தன்னுடைய நண்பரும் 2டி நிறுவன நிர்வாகியுமான ராஜசேகரன் கற்பூரபாண்டியனையும் உடன் அழைத்துச் சென்றிருக்கிறார். பிரார்த்தனையின் போது இவர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது இணையதளத்தில் வெளியாகி உள்ளது.

share