Kollywood News

  • Home/
  • Cine News/
  • சிங்கத்தின் பாராட்டைப் பெற்ற காஷ்மோரா....

சிங்கத்தின் பாராட்டைப் பெற்ற காஷ்மோரா....



ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பாக கார்த்தி நடித்து கடந்த வெள்ளியன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது ‘காஷ்மோரா’. அனைவரிடமும் நல்ல ஒரு வரவேற்பை பெற்று வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது இப்படம். 

இப்படத்தினை பார்த்த நடிகரும், கார்த்தியின் சகோதரருமான சூர்யா கூறும்போது,  ’பருத்தி வீரன் படத்தை பார்த்த போது நான் அவனை கட்டிப் பிடித்தேன். காஷ்மோரா பார்த்த பிறகு நான் சற்று தள்ளி நின்று அவனை பார்க்கிறேன். தம்பி.. டேய்.. கலக்கிட்ட...

இப்படி ஒரு கதை உருவாகிவருகிறது என்ற செய்தியை கூட எனக்கு அவன் கூறியதில்லை. அவனுடைய நடிப்பை பார்த்து வியப்பில் உள்ளேன். ராஜ் நாயக் கதாபாத்திரம் மிகவும் பேசும்படியாக உருவாகியுள்ளது. 

முரட்டுத்தனமான தோற்றத்தில் அனைவரையும் பிரம்மிப்பில் ஆழ்த்தியுள்ளார். இயக்குனர் கோகுல் மற்றும் படக்குழுவினர் அனைவரும் இதுவரை எட்டாத ஒரு எல்லையை அடைந்துள்ளார்கள். 

அனைவருக்கும் எனது பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த படத்தினை பெரிய திரையில் பார்க்க வேண்டிய ஒரு படைப்பு ஆதலால், திரையரங்குகளில் சென்று படத்தினை பாருங்கள்.’ என்று கூறியுள்ளார் சூர்யா...

share