Kollywood News

  • Home/
  • Cine News/
  • ’தானா சேர்ந்த கூட்டம்’ டீமோடு கைகோர்த்த கீர்த்தி....

’தானா சேர்ந்த கூட்டம்’ டீமோடு கைகோர்த்த கீர்த்தி....


ரஜினி முருகன் படத்தின் மூலம் தன்னை வெற்றி நாயகியாக அறிமுகப்படுத்திக் கொண்டவர் கீர்த்தி சுரேஷ். இந்த படத்தில் இடம் பெற்ற ‘உன் மேல ஒரு கண்ணு..’ பாடலின் மூலம் தமிழக ரசிகர்களின் மனங்களை வெகுவாக கவர்ந்தார். 

அதன் பிறகு கீர்த்திக்கு கிடைத்த வாய்ப்புகள் அனைத்தும் ஜாக்பாட் தான். பிரம்மாண்டக வெளியான ‘ரெமோ’, தனுஷின் ‘தொடரி’, தற்போது விஜய்யுடன் ‘பைரவா’ என அனைத்திலும் தன்னை கதாநாயகியாக நிலைநிறுத்திக் கொண்டார்.

இதன் அடுத்த கட்டமாக தற்போது விக்னேஷ் சிவனின் இயக்கத்தில் சூர்யா நடிக்க உருவாக இருக்கும் ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தில் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார் கீர்த்தி சுரேஷ். 

இந்த படத்தினை ஸ்டுடீயோ கிரீன் சார்பாக கே ஈ ஞானவேல் ராஜா தயாரிக்கவிருக்கிறார்.


share