Kollywood News

  • Home/
  • Cine News/
  • சிங்கத்தோடு இணைந்த பாகுபலி நாயகன்...

சிங்கத்தோடு இணைந்த பாகுபலி நாயகன்...



சூர்யா தற்போது ஹரி இயக்கத்தில் ‘எஸ்-3’ படத்தில் நடித்து வருகிறார். படத்தின் படப்பிடிப்பு மிகவும் மும்முரமாக நடைபெற்று வருகிறது. 80 சதவீத படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில் க்ளைமாக்ஸ் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறதாம்.

இப்படத்தில் அனுஷ்கா, ஸ்ருதிஹாசன், சூரி, விவேக், ராதாரவி, ராதிகா சரத்குமார் போன்ற முன்னனி நட்சத்திரங்கள் இப்படத்தில் நடிக்கின்றனர்.  சிங்கம் படத்தின் இரண்டு பாகங்களும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்துள்ளதால், இந்த பாகத்தினையும் பெருமளவில் எதிர்பார்க்கிறார் சூர்யா.

தெலுங்கு பகுதியில் சூர்யாவிற்கு அதிகப்படியான ரசிகர்கள் இருப்பதினால், அவர்களை மேலும் உற்சாகப்படுத்த தனது ‘எஸ்-3’ படத்தில் தெலுங்கு சூப்பர் ஹீரோ பிரபாஸை இந்த படத்தின் முக்கிய ரோலில் நடிக்க வைத்துள்ளார் சூர்யா.

சிங்கத்தோடு பாகுபலி இணைந்துள்ளதால் சூர்யா ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.

share