Kollywood News

  • Home/
  • Cine News/
  • சூர்யாவின் ’எஸ் 3’ வெளியாவதில் ஏற்பட்ட தாமதம்... காரணம் என்ன..??

சூர்யாவின் ’எஸ் 3’ வெளியாவதில் ஏற்பட்ட தாமதம்... காரணம் என்ன..??


சூர்யாவின் நடிப்பில் ஹரி இயக்கத்தில் மிகவும் வேகமாக வளர்ந்து வருகிறது ‘எஸ் 3’. சிங்கம் படத்தின் மூன்றாவது பகுதியாக உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையை சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று வந்தது.

80 சதவீத படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில் அடுத்த கட்ட படப்பிடிப்பிற்காக வெளிநாடு செல்லவிருந்தது படக்குழு. ஆனால், திடீரென்று ஏற்பட்ட தொழில்நுட்ப வேலைகளின் காரணமாக படப்பிடிப்பு தற்சமயம் தள்ளி சென்றுவிட்டது.

சில நாட்களுக்கு பிறகு மீண்டும் வெளிநாட்டில் சென்று படப்பிடிப்பு நடத்தவுள்ளனர் படக்குழுவினர். தீபாவளி அன்று ரசிகர்களுக்கு சூர்யா விருந்து படைப்பார் என அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், காலதாமதத்தினால் டிசம்பர் மாதத்தில் தான் படம் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Read More about :

share