Kollywood News

  • Home/
  • Cine News/
  • ’சிங்கம்-3’லும் தனது வேட்டையை வெற்றிகரமாக நடத்திய சூர்யா...

’சிங்கம்-3’லும் தனது வேட்டையை வெற்றிகரமாக நடத்திய சூர்யா...



சூர்யா-ஹரி கூட்டணியில் உருவாகியுள்ள சி-3 இன்று உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கான திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. சிங்கம் 1, சிங்கம் 2 என தொடர்ந்து இரண்டு பகுதியும் ப்ளாக் பஸ்டர் ஹிட் அடித்துள்ளதால், மூன்றாம் பகுதியும் அநேக எதிர்பார்ப்புடன் வெளியாகியுள்ளது.

படத்தினை பார்த்த ரசிகர்கள் நிச்சயம் இந்த பகுதியும் ப்ளாக் பஸ்டர் ஹிட் அடிக்கும் எனவும் கூறியுள்ளனர். அதிவேகமாக கதைக்களம் நகர்வது படத்திற்கு மிகப்பெரிய பலமாக இருக்கிறது என்றும் ரசிகர்கள் கூறியுள்ளனர். தமிழ்நாட்டில் மட்டுமல்ல மலையாளம் மற்றும் ஆந்திர மக்களிடையேயும் தனது ரசிகர்கள் பட்டாளத்தை அதிகமாக வைத்துள்ள சூர்யா, அங்கேயும் தனது வெற்றிக் கொடியை நிலை நிறுத்துவார் என்பதில் எந்த வித சந்தேகமுமில்லை..

share