Kollywood News

  • Home/
  • Cine News/
  • 2 வருடத்திற்கு பிறகு தனது ரசிகர்களுடன் பிறந்த நாளை கொண்டாடிய சூர்யா..!!

2 வருடத்திற்கு பிறகு தனது ரசிகர்களுடன் பிறந்த நாளை கொண்டாடிய சூர்யா..!!



சூர்யா தன்னுடைய பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்களை 2 வருட இடைவேளைக்கு பிறகு நேற்று சந்தித்து கலந்துரையாடினார். இந்நிகழ்வு சென்னையில் உள்ள ஸ்ரீ வாரி திருமண மண்டபத்தில் வைத்து நடைபெற்றது. இவ்விழாவில் தமிழகம், கேரளம், ஆந்திரா, கர்நாடகா மற்றும் மும்பையில் இருந்து வந்து சுமார் 10.000க்கும் மேல் ரசிகர்கள் கலந்து கொண்டனர்.

விழாவில் பேசிய சூர்யா, என்னுடைய பிறந்தநாளை முன்னிட்டு இரண்டு வருட இடைவேளைக்கு பின் என்னுடைய அன்பிற்குரிய ரசிகர்களாகிய உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி. ரசிகர்களாகிய நீங்கள் அனைவரும் மிக சிறப்பான முறையில் நற்பணிகளை செய்து வருவது எனக்கு பெருமையும், சந்தோஷத்தையும் அளிக்கிறது.

ஆனால், எல்லோரும் முதலில் உங்கள் தாய், தந்தை, குடும்பம் மற்றும் உங்கள் தொழில் இவற்றிற்குதான் முதலில் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அதன் பிறகு நற்பணிகளில் ஈடுபட்டால் போதும்.” என்று கூறினார்.
விழாவில் பங்கேற்ற அனைத்து ரசிகர்களுக்கும் உணவு வழங்கப்பட்டது. வந்திருந்த ரசிகர்கள் அனைவரிடமும் தனியாக புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

share