Kollywood News

  • Home/
  • Cine News/
  • சிங்கத்தின் புகழ் பாடும் விக்னேஷ் சிவன்..!!

சிங்கத்தின் புகழ் பாடும் விக்னேஷ் சிவன்..!!



நானும் ரெளடிதான் படத்திற்கு பிறகு விக்னேஷ் சிவன் அடுத்ததாக சூர்யாவை வைத்து படம் இயக்கவிருக்கிறார்.  சூர்யாவின் ‘எஸ்-3’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததும் இந்த படம் துவங்கப்பட இருக்கிறது.

இந்த படத்திற்கு இசையமைக்கிறார் அனிருத். இந்த படம் சூர்யாவிற்கு 35-வது படமாக அமையவிருக்கிறது. சூர்யாவிற்காக இந்த கதையை ப்ரத்யேகமாக தயார் செய்துள்ளார் இயக்குனர் விக்னேஷ் சிவன்.

இதுகுறித்து அவர் கூறியதாவது, ‘ நான் இதற்கு முன் சூர்யாவை நிகழ்ச்சி மேடைகளில் மட்டுமே பார்த்துள்ளேன். அவரிடம் நேரில் சென்று கதை கூறும் போது எனக்கு சிறிது பதட்டமாக இருந்தது. ஆனால், சூர்யாவோ என்னை மிகவும் அன்போடும் பணிவோடும்  என்னை வரவேற்றார். படத்தின் முழுக் கதையையும் கேட்ட பின்னர் சிறிது இடத்தில் மாற்றம் செய்ய சொன்னார் சூர்யா. அதற்கேற்றபடி கதையில் சிறிது மாற்றம் செய்துள்ளேன். விரைவில் படப்பிடிப்பு துவங்கப்பட உள்ளது.’ என்றார்.

சூர்யாவின் ஜோடியாக விக்னேஷ் சிவனின் காதலியான நயன்தாரா நடிப்பார் என கூறப்படுகிறது. கே எஸ் ரவிக்குமார்-சரண்யா பொன்வண்ணன் சூர்யாவின் பெற்றோர்களாக நடிக்கவிருக்கின்றனர்.

share