Kollywood News

  • Home/
  • Cine News/
  • இந்த நடிகையால் தான் சூர்யா-விக்னேஷ் சிவன் கூட்டணி இணைந்ததாம்..???

இந்த நடிகையால் தான் சூர்யா-விக்னேஷ் சிவன் கூட்டணி இணைந்ததாம்..???


நானும் ரெளடிதான் என்ற மாபெரும் வெற்றிக்குப் பிறகு விக்னேஷ் சிவன் தனது அடுத்த படத்தினை சூர்யாவை வைத்து இயக்கவிருக்கிறார். சூர்யா தற்போது ஹரி இயக்கத்தில் உருவாகி வரும் எஸ் 3 படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தினை முடித்த கையோடு விக்னேஷ் சிவனுடன் இணையவிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், இந்த படத்திற்கு பலம் சேர்ப்பதற்காக இசையமைப்பாளர் அனிருத்தும் இந்த கூட்டணியில் இணைந்துள்ளார். இந்த கூட்டணி இணைய மிக முக்கிய காரணமாக இருந்தது முன்னணி நடிகை ஒருவராம். அவர் தான் விக்னேஷ் சிவனின் இப்போதைய மிகவும் நெருக்கமான ஒரு நண்பரும் கூட.

இவர் இல்லையென்றால் இந்த கூட்டணி சாத்தியமே இல்லை என கோலிவுட் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது. ஏற்கனவே மாஸான படத்தில் சூர்யாவோடு இணைந்திருந்ததால் அவர் கேட்கவும் சூர்யா ஓகே கூறியதாக தெரிகிறது.

சூர்யாவுக்கு இது 35வது படமாகும்..

share