Kollywood News

  • Home/
  • Cine News/
  • படப்பிடிப்பு தளத்தில் பிரச்சனை... பாதியில் கிளம்பிய ‘தானா சேர்ந்த கூட்டம்’..!!

படப்பிடிப்பு தளத்தில் பிரச்சனை... பாதியில் கிளம்பிய ‘தானா சேர்ந்த கூட்டம்’..!!


சூர்யா நடிக்கும் அடுத்த படத்தை இயக்கி வருகிறார் விக்னேஷ் சிவன். சில தினங்களுக்கு முன் காரைக்குடி பகுதியில் படப்பிடிப்பினை முடித்து சென்னை வந்த படக்குழு சென்னை பகுதிகளில் படப்பிடிப்பினை நடத்தி வருகிறது. 

சென்னை கே.கே நகரில் உள்ள பாரதிதாசன் குடியிருப்பில் நேற்று தொடங்கியது.
முதல் நாளான நேற்றே படப்பிடிப்பு பாதியில் நிறுத்தப்பட்டது. ஏன் என்று விசாரிக்கையில், “பாரதிதாசன் குடியிருப்பில் வசிக்கும் மக்களுக்கு இடையூறு கொடுக்கும் வகையில் படப்பிடிப்பு நடந்ததாம், அதுமட்டுமில்லாமல் அந்த பகுதியில் அன்றாடம் மக்கள் உபயோகிக்கும் வழியை மறித்து படப்பிடிப்பை நடத்தியுள்ளனர். இது அந்த பகுதி மக்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் கோபமடைந்த அவர்கள் இங்கே படப்பிடிப்பு நடத்தக்கூடாது என்று தகராறு செய்தனர். இந்த பிரச்சினையால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டதுடன் படப்பிடிப்பும் பாதிலேயே நிறுத்தப்பட்டது. பின்பு படக்குழுவினர் அந்த இடத்தை விட்டு கிளம்பிவிட்டனராம்.

share