தல ரசிகர்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி செய்தி

'தல' என்று கிரிக்கெட் ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்பட்டு வரும் முன்னாள் இந்திய கேப்டன் தோனியின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் 'தோனி தி அண்டோல்ட் ஸ்டோரி' கடந்த 2016ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது என்பது தெரிந்ததே. பிரபலங்களின் வாழ்க்கை வரலாறு திரைப்படங்கள் பல வெளிவந்தபோதிலும் இந்த படத்தின் வசூல் சாதனை செய்தது. கிரிக்கெட்டே விளையாடாத நாடுகளிலும் இந்த படம் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது.

மேலும் ''தோனி தி அண்டோல்ட் ஸ்டோரி' படத்தில் அவரது இளமைக்காலம், கிரிக்கெட் ஆர்வம், இந்திய அணியில் இணைதல் மற்றும் உலகக்கோப்பையை இந்தியாவுக்கு பெற்றுத்தருத வரை திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கும். இந்த நிலையில் 'தோனி தி அண்டோல்ட் ஸ்டோரி' படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் தொடங்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இந்த செய்தி தல ரசிகர்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சியான செய்திதான் என்பதில் சந்தேகம் இல்லை.

இந்த இரண்டாம் பாகத்தில் 2011ஆம் ஆண்டு உலகக்கோப்பைக்கு பின்னர் நடந்த கிரிக்கெட் மற்றும் பர்சனல் நிகழ்வுகள் குறித்தும் ஐபிஎல் போட்டியில் அவரது பங்கு குறித்தும் அலசப்படவுள்ளது. முதல் பாகத்தில் தோனியான நடித்த சுஷாந்த்சிங் ராஜ்புத் இந்த இரண்டாம் பாகத்திலும் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Source : Indiaglitz

share