Kollywood News

  • Home/
  • Cine News/
  • மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தமன்னா தரிசனம்!

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தமன்னா தரிசனம்!



சில தினங்களுக்கு முன் உலக புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கடந்த 2ம் தேதி கிழக்கு கோபுர வளாகத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து காரணமாக கோவிலில் பொதுமக்கள் தரிசனத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. தற்போது மீண்டும் அனுமதி வழங்கப்பட்டதையடுத்து பொது மக்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். 

இந்நிலையில், மீனாட்சி அம்மன் கோவிலுக்கு இன்று காலை வந்த நடிகை தமன்னா பக்தர்களுடன் நீண்ட நேரம் வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்துள்ளார்.

சீனு ராமசாமி இயக்கத்தில் தமன்னா நடிக்கவிருக்கும் ‘கண்ணே கலைமானே’ படத்தின் ஷூட்டிங் துவங்கவிருக்கும் நிலையில், மீனாட்சி அம்மனை தமன்னா தரிசித்து சென்றுள்ளார். 

Read More about :

share