Kollywood News

  • Home/
  • Cine News/
  • ஐந்து கிரவுண்டு பரப்பளவில் உருவாகிவரும் அஜித்தின் புதிய வீடு

ஐந்து கிரவுண்டு பரப்பளவில் உருவாகிவரும் அஜித்தின் புதிய வீடு

சிவா இயக்கத்தில் அஜித், நயன்தாரா நடிப்பில் வருகிற பொங்கலுக்கு ரிலீஸாக இருக்கும் படம் ‘விஸ்வாசம்’. 

இதைத் தொடர்ந்து, ‘தீரன் அதிகாரம் ஒன்று’ எச்.வினோத் இயக்கத்தில் நடிக்கிறார் அஜித். அமிதாப் பச்சன், டாப்ஸி நடிப்பில் வெளியான ‘பிங்க்’ பாலிவுட் படத்தின் ரீமேக் இது. மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார்.

இந்நிலையில், கிழக்கு கடற்கரைச் சாலையில் மிகப் பிரமாண்டமான வீடு ஒன்றைக் கட்டி வருகிறார் அஜித். ஐந்து கிரவுண்டு பரப்பளவில் உருவாகிவரும் இந்த வீட்டில், டிஜிட்டல் தியேட்டர், டப்பிங் மற்றும் எடிட்டிங் ஸ்டுடியோ என சகல வசதிகளும் இருக்கும் என்று கூறப்படுகிறது.

Read More about :

share