Kollywood News

  • Home/
  • Cine News/
  • 'தளபதி 62' பர்ஸ்ட்லுக் ரிலீஸ் தேதி அறிவிப்பு

'தளபதி 62' பர்ஸ்ட்லுக் ரிலீஸ் தேதி அறிவிப்பு

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'தளபதி 62. இந்த படத்தை தீபாவளி அன்று வெளியிடும் நோக்கத்தில் படக்குழுவினர் இரவுபகலாக பணிபுரிந்து வருகின்றனர்.

இந்த நிலையில் வரும் 22ஆம் தேதி விஜய் பிறந்த நாளில் இந்த படத்தின் டைட்டிலுடன் கூடிய பர்ஸ்ட்லுக் வெளியாக வாய்ப்பு இருப்பதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகி வந்தன. மேலும் பர்ஸ்ட்லுக் குறித்த அறிவிப்பை தயாரிப்பு நிறுவனம் இன்று வெளியிடும் என்றும் கூறப்பட்டது.

இதன்படி சற்றுமுன்னர் சன்பிக்சர்ஸ் நிறுவனம் தனது சமூக வலைத்தள பக்கத்தில் 'தளபதி 62' படத்தின் ஃபர்ஸ்ட்லுக் வரும் 21ஆம் தேதி மாலை 6 மணிக்கு சன் டிவியில் வெளியிடவுள்ளதாக அறிவித்துள்ளது. இந்த தகவல் விஜய் ரசிகர்களுக்கு பெரும் உற்சாகத்தை கொடுத்துள்ளது.

Source : Indiaglitz

Read More about :

share