Kollywood News

  • Home/
  • Cine News/
  • ஹாட்ரிக் ஹிட் கொடுக்குமா....! தளபதி விஜய் – அட்லி கூட்டணி!

ஹாட்ரிக் ஹிட் கொடுக்குமா....! தளபதி விஜய் – அட்லி கூட்டணி!

தெறி, மெர்சல் படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக அட்லி இயக்கத்தில் தளபதி விஜய் தன்னுடைய 63வது படத்தில் நடிக்கிறார்.

இந்தக் கூட்டணியில் உருவாகும் புதிய படத்தை ஏஜிஎஸ் புரோடக்‌ஷன் நிறுவனம் தயாரிக்கிறது. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

இப்படம் குறித்து ஏஜிஎஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: இதுவரை வெளிவந்த தளபதி விஜய்யின் படங்களில் இருந்து இப்படம் முற்றிலும் மாறுபட்ட ஒன்றாக இருக்கும். கல்பாத்தி எஸ் அகோரம், கல்பாத்தி எஸ் கணேஷ், கல்பாத்தி எஸ்.சுரேஷ் ஆகியோர் இப்படத்தை தயாரிக்கின்றனர். 

தளபதி 63 படம் அவரது ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் மாபெரும் பொழுது போக்கு திரைப்படமாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

share