Kollywood News

  • Home/
  • Cine News/
  • ஆயுதபூஜை திருநாளில் ரசிகர்களுக்கு விருந்தளிக்க வருகிறது சர்க்கார்

ஆயுதபூஜை திருநாளில் ரசிகர்களுக்கு விருந்தளிக்க வருகிறது சர்க்கார்

இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வரும் 'சர்கார்' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் விறுவிறுப்புடன் நடந்து வருகிறது.

மேலும் இந்த படத்தின் டீசர் வரும் ஆயுதபூஜை திருநாளில் வெளிவர வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் உலகம் முழுவதும் உள்ள தமிழ் ரசிகர்களுக்காக தீபாவளி அன்று இந்த படம் வெளிவரவுள்ள நிலையில் தற்போது இந்த படம் அதே தீபாவளி தினத்தில் தெலுங்கிலும் டப் செய்து வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

ஒரே நாளில் கிட்டத்தட்ட தென்னிந்தியா முழுவதும் இந்த படம் வெளிவரவுள்ளதால் ஓப்பனிங் வசூல் புதிய சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

share