தளபதியின் சர்கார் படப்பிடிப்பு நிறுத்தம்.

திமுக தலைவர் கருணாநிதியின் மறைவை தொடர்ந்து விஜய்யின் சர்கார் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது.

கருணாநிதியின் மரணத்தையொட்டி தமிழக அரசு நேற்று ஒருநாள் பொது விடுமுறை அறிவித்தது.

இந்நிலையில் அமெரிக்காவில் நடைபெற்றுவரும் விஜய்யின் சர்கார் பட படப்பிடிப்பு நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். முன்னதாக காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெறும் சமயத்தில் நடிகர் விஜய் மருத்துவமனைக்கு நேரடியாக வந்து கருணாநிதியின் உடல்நலம் குறித்து மு..ஸ்டாலினிடம் விசாரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே தேதி குறிப்பிடாமல் சர்கார் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

Read More about :

share