Kollywood News

  • Home/
  • Cine News/
  • தனது ரசிகருக்காக கேக்கை கையில் ஏந்திய எளிமை நடிகர் விஜய்

தனது ரசிகருக்காக கேக்கை கையில் ஏந்திய எளிமை நடிகர் விஜய்

நடிகர் சங்கத் தலைவரும், முன்னணி நடிகருமான நாசரின் மகன் பைசல். சில வருடங்களுக்கு முன்பு சாலை விபத்தில் சிக்கினார். அதிலிருந்தே வீட்டிலிருந்தபடியே சிகிச்சை எடுத்து வருகிறார்.

பைசல் தீவிரமான விஜய் ரசிகர். இதை அறிந்த விஜய், அவ்வப்போது நாசர் வீட்டுக்குச் சென்று பைசலையுடன் நேரம் செலவிட்டு வந்தார். 

இந்த நிலையில் ஃபைசலின் பிறந்த நாள் டிசம்பர் 1 கொண்டாடப்பட்டது. இந்த பிறந்த நாள் விழாவில் ஃபைசலின் நண்பர்கள் சிறப்பாக நடத்தி கொண்டிருந்தபோது இன்ப அதிர்ச்சியாக தளபதி விஜய் நேரில் வந்து பிறந்த நாள் வாழ்த்துக்கள் கூறினார். அதுமட்டுமின்றி பிறந்த நாள் கேக்கை விஜய் கையில் ஏந்த, மெழுகுவர்த்திகளை ஏற்றினார் ஃபைசல். ஒரு மிகப்பெரிய நடிகர் ஒருவர் தனது ரசிகருக்காக கேக்கை கையில் ஏந்திய எளிமை போற்றத்தக்கதாக கருதப்படுகிறது.

இப்புகைப்படங்களை நாசரின் மனைவி கமீலா நாசர் தனது சமூகவலைத்தள பக்கத்தில் பகிர்ந்து, “விஜய் அண்ணாவுடன் பிறந்தநாள் கொண்டாட வேண்டும் என்ற உன் கனவு நனவாகியுள்ளதே”. இந்த பிறந்த நாளில் தனது மகனுக்கூ வாழ்த்து தெரிவித்த விஜய்க்கு நன்றி என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Read More about :

share